சர்வதேச அளவில் 7வது சதம் அடித்த ஸ்மிருதி மந்தனா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது

இரண்டாவது போட்டி (ஜூன் 19) பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள்

இதில் 38 பந்துகள் களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்

அடுத்து வந்த தயாளன் ஹேமலதா 24 ரன்களில் நடையைக் கட்டினார்



அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் ஸ்மிருதி மந்தனா

சர்வதேச ஒரு நாள் போட்டியில் தன்னுடைய 7வது சதத்தை பதிவு செய்தார் மந்தனா

120 பந்துகள் களத்தில் நின்று 18 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 136 ரன்களை குவித்தார்

அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனை சமன் செய்தார்