2024 ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் பட்டியல் 2024, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸின், பாரிஸ் நகரில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன இந்தியா ஆறு பதக்கங்கள்(1 வெள்ளி, 5 வெண்கலம்) வென்று 71வது இடத்தை பிடித்தது துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய பெண்மணியாக மனு பாக்கர் சாதனை புரிந்தார். 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவு போட்டியில் மனு பாக்கர்-சரப்ஜோத் சிங் இணை வெண்கல பதக்கம் பெற்றனர் சுவப்னில் குசலே துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார் அமன் செஹ்ராவத், ஆண்களுக்கான 57 கிலோ மல்யுத்த போட்டியில் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் வெணகல பதக்கம் வென்றார் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா இரண்டாவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது