2023-ல் மகளிருக்கான பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இன்று(14/02/2025) மூன்றாவது சீசன் தொடங்குகிறது.
இந்நிலையில், WPL-ல் விளையாடும் கிரிக்கெட் வீராங்கனைகளுள் அதிக அரை சதம் அடித்தவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் ஒருவர் தான்.
கடந்த இரண்டு சீசன்களிலும் இரண்டாவது இடத்தை பிடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
அதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனுமான மெக் லானிங்.
WPL-ல் அதிக அரை சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரிய வீராங்கனையும் மெக் லானிங் தான்.
இதுவரை நடந்த இரண்டு சீசனில், 9 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
9 போட்டிகளில் 4 அரை சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
அவருக்கு அடுத்ததாக இந்தியாவை சேர்ந்த தீப்தி ஷர்மா (UP Warriorz) இருக்கிறார். இவர் விளையாடிய 8 போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்துள்ளார்.