கார்த்திகை தீபத்தில் விளக்குகளை எப்படி ஏற்ற வேண்டுமென்ற விதிமுறைகள்

6 மணிக்கு திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு வீடுகளில் தீபன் ஏற்றினால் நன்மை பயக்கும்

திக்கார்த்திகை தீபத்தன்று வாழைத்தண்டு, தாமரை அல்லது தூய காட்டன் திரியை பயன்படுத்துவது உத்தமகமாகும்

மனம் ஒருமித்த வளமான வாழ்வு பெற பசு நெய்யால் விளக்கேற்ற வேண்டும்

கார்த்திகை அன்று நல்லெண்ணையில் விளக்கேற்றினால் செல்வ வளம் செழிக்கும்

இலுப்பை எண்ணையில் விளக்கு ஏற்றினால் ஐஸ்வர்யம் பெருகி, வீட்டில் மன நிம்மதி ஏற்படும் என்பது ஐதீகம்

திருக்கார்த்திகை தீபத்தன்று கையால் செய்த மூன்று அகல்விளக்காவது ஏற்ற வேண்டும்

வீடுகளில் குறைந்தபட்சம் 27 விளக்குகள் 45 நிமிடமாவது ஏற்ற வேண்டும்

கிழக்கு, மேற்கு, வடக்கு திசைகளை நோக்கி தீபம் ஏற்றுவது வீட்டிற்கு நல்லது

தெற்கு திசையை நோக்கி எக்காரணம் கொண்டும் தீபம் ஏற்றக்கூடாது என்று சொல்லப்படுகிறது