எஸ்.பி.பி-யின் பாட்டு எப்போதுமே மனதிற்கு நெருக்கத்தையும் விவரிக்க முடியாத இன்பத்தையும் கொடுக்க வல்லது. பாடும் நிலாவின் நினைவு தினம் இன்று.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடலில் மட்டுமல்ல படிப்பிலும் சகலகலா வல்லவர். பொறியியல் படித்திருக்கிறார். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 3 பாடல்கள் என ஆண்டுக்கு 930 பாடியிருக்கிறார். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நடிப்பிலும் திறமையானவர். தமிழ், தெலுங்கு கன்னடம் ஆகிய மொழில்கள் சரளமாக பேசக் கூடியவர்.. சுமார் 72 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 46 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரின் பாடல்கள் நம்மை தூங்க வைக்கும், துன்பப்பட வைக்கும். புன்முறுவல் பூக்க செய்யும். எத்தனை காலம் சென்றாலும் நம்மோடு பாலு இருப்பார்! எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் வாழ்கிறார். நீ இன்மை வேதையானது பாலு!