இரவு நேரத்தில் சிறப்பாக தூங்க வேண்டுமா... இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க...! அரோமாதெரபி என்பதன் மூலம் எண்ணெய் தேய்த்து நம்முடைய மன அழுத்தம் மற்றும் தூக்கின்மைக்கு தீர்வு காண முடியும். நம்முடைய உணவில் அதிகளவில் ஆல்மண்ட், பால், மஞ்சல் உள்ளிட்டவற்றை எடுத்து கொண்டால் தூக்கம் சரியாக வர வாய்ப்புள்ளது. சரியாக தூங்குவதற்கு நல்ல தலையணையை பயன்படுத்த வேண்டும். நல்ல தலையணையை நாம் பயன்படுத்தும் போது விரைவாக தூக்கும் வரும். தூங்குவதற்கு ஏற்ப நல்ல சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அதாவது நம்முடைய அறையில் வெளிச்சம் குறைவாகவும் வெப்பம்நிலை சற்று குறைவாகவும் வைத்திருக்க வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பாக லேசான சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். இப்படி தூங்குவதற்கு முன்பாக சுடு தண்ணீரில் குளித்தால் நம்முடைய தசைகள் அனைத்தும் நன்றாக இருக்கும். அத்துடன் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருந்து நம்முடைய தூக்கத்தின் தரத்தை அதிகரிக்க உதவும்.