தினமும் பர்கர் பீட்சா சாப்பிட்டால் இதய நோய் வருமாம்...



துரித உணவுகளையும் நொறுக்கு தீனியையும் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது



இதில் பீட்சா, பர்கர் மட்டும் அடங்காது



நம்ம ஊர் சமோசா, பஜ்ஜி, போண்டா என அனைத்தும் அடங்கும்



அதிக அளவிலான சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடுவதும் நல்லதல்ல



இதில் எந்த விதமான நன்மைகளும் கிடையாது



இவற்றை சாப்பிடுவதால் மந்த உணர்வு ஏற்படும்



உடலில் கொழுப்பு சேரும். உடல் எடை அதிகரிக்கும்



இதனால் பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மிகவும் அதிகம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்



இது போன்ற உணவுகளை ஆசைக்காக எப்போதாவது கொஞ்சமாக சாப்பிடலாம்