குழந்தை வயதில் பலரும் பருத்த உடல் தோற்றத்துடன் இருப்பர்



வளர வளர சிலர் டயட்டினால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வர்



சிலரால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய முடியாது



உணவு கட்டுப்பாட்டை பின் பற்ற முடியாது



இதனால் அவர்களால் உடல் எடையை குறைக்க முடியாது



தற்போது தூக்கத்திற்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் உள்ளது என ஆய்வு ஒன்று கூறுகிறது



சரியாக தூங்காமல் இருந்தால், குழந்தைகளின் எடை கூடுமாம்



தூக்கமின்மையால், பசிக்காமலே அதிகம் சாப்பிடுவார்களாம்



இப்பழக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது



இதை மேகன் எனும் உதவி பேராசிரியர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்