திங்கட்கிழமையில்தான் பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறதா? ஆய்வு சொல்வது என்ன?



இப்போது பலருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது



வயது வரம்பின்றி சிறுவயதினருக்கும் இப்பிரச்சினை வருகிறது



திங்கட்கிழமைகளில்தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது



10,528 நோயாளிகளை அயர்லாந்தை சார்ந்த மருத்துவர்கள் ஆய்வு செய்துள்ளனர்



ஃபெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் ட்ரஸ்ட் அண்ட் தி ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜியன்ஸில் இது நடத்தப்பட்டுள்ளது



2013-2018க்கு இடையிலான காலகட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது



ஞாயிற்றுகிழமைகளை விட திங்கட்கிழமைகளில் பலரும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது



ஏன் இப்படி நடக்கிறது என்பதற்கான விடை யாருக்கும் தெரியவில்லை



இந்த சிக்கலுக்கு தீர்வளிக்க ஆய்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது அந்த மருத்துவமனை