தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன்! குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவானார் இவர் இதுவரை 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் 'சினிமா துறையில் தனிச்சிறப்பு பெற்றவர்’ என்ற டாக்டர் பட்டம் இவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது நடிப்பு மட்டுமன்றி தனது திரைக்கதை மற்றும் பாடலினால் ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு..! இவரும் நடிகை ஹன்சிகாவும் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தனர்.. பின்பு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டது தற்போது ‘மஹா’ திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் பைலட்டாக இவர் நடித்துள்ள கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!