பட்டுப் புடவைகளை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் இதோ!



புடவை கட்டும் போது பயன்படுத்தும் பின்களை பொறுமையாக கையாள வேண்டும்



கொசுவம் வைத்து அதை அழுத்தி விடும்போது பார்டரையும் சேர்த்து அழுத்தாதீர்கள்



பட்டுப் புடவையை அடித்துத் துவைக்கக் கூடாது



குளிர்ந்த நீரில், சோப்புத் தூள் போடாமல் நனைத்து அழுத்திப் பிழியாமல் உலர்த்த வேண்டும்



3 அல்லது 4 முறை அலசி, கஞ்சி போட்டு, உதறி, நீவிவிட்டு உலர்த்த வேண்டும்



ஜரிகையின் மேல் நியூஸ் பேப்பரை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்ய வேண்டும்



முதலில் ஜரிகையை மட்டும் இஸ்திரி செய்து, பின் மீத இடங்களை இஸ்திரி செய்யலாம்



ஒற்றையாகவோ அல்லது இரண்டாகவோ மடித்து இஸ்திரி செய்யலாம்



பட்டுப் புடைவையை எப்போதும் உள்புறமாக மடிக்க வேண்டும்