அதிக டோஸ் உள்ள மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது மருத்துவர் பரிந்துரைத்த அளவு மட்டுமே மாத்திரைகளை சாப்பிடவேண்டும் உடல்நிலை சரியாகிவிடும் என்று கருதி அதிக அளவு டோஸ் உட்கொள்கிறார்கள் ஆரோக்கியம் மற்றும் வயதைப் பொறுத்தும் மாத்திரையின் டோஸ் அளவு மாறுபடும் அளவை விட அதிகமாக இருந்தால் அது அதிக டோஸாக கணக்கிடப்படும் சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரை சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது அதிகமாக ஸ்வீட் சாப்பிட்டுவிட்டோம் என்று இரண்டு மாத்திரையை சாப்பிடக் கூடாது காய்ச்சல், உடல் வலி போன்றவற்றுக்காக ஒரே விதமான மாத்திரையை அதிகமாக சாப்பிடக்கூடாது சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உறுப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வயிறு தொடர்பான உபாதைகளை உண்டாக்கும்