'அயோடின்' என்ற சொல் கிரேக்க மொழியின் ‘ioeides’ என்னும் சொல்லில் இருந்து உருவானது. பொதுவாக, அயோடினை சூடுபடுத்தும்போது ஊதா அல்லது செந்நீலம் ஆகிய நிறங்களில், இவற்றின் புகை இருக்கும். இதன் வேதியியல் குறியீடு ‘ I ’. ஐயோடின் ஐயோடைஸ்டு உப்பில் மட்டும் தான் இருக்கிறது. அது தைராய்டு அளவைக் காக்க அவசியமானது. உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்கவும் 'தைராக்ஸின்' ஹார்மோன் உதவுகிறது. உலக அளவில் அக்டோபர் 21, அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. வேறு சில உணவுகளின் மூலம் அயோடினைப் பெறலாம் என்று கூறி உங்களை சிலர் திசை திருப்பலாம். ஆனால் அது உண்மையென நம்பாதீர்கள். எல்லா மக்களுக்குமே அயோடினை மாற்றும் உணவின் மூலம் கிடைக்கப்பெறும் வசதியும் வாய்ப்பும் இருக்காது. அதனாலேயே அயோடைஸ்டு உப்பை உட்கொள்வது சிறந்தது எனப் பரிந்துரைக்கிறேன். அயோடின் உள்ள உப்பை மட்டுமே பயன்படுத்துங்கள்.