பெடிக்யூர் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது பலரும் நடை அழகாக இருக்க வேண்டும் என்று கவனமாக இருக்கிறார்கள் கால் பாதங்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிப்பதே இல்லை பெடிக்யூர் செய்துக்கொள்வதில் முதன்மையான காரணங்களில் ஒன்று கால்களின் ஆரோக்கியமாகும் இறுக்கமான சூழ்நிலை காலில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும் பெடிக்யூர் செய்துகொள்வது கால் மற்றும் பாத நலனை மேம்படுத்தும் பாதங்களில் மசாஜ் செய்வதனால் அங்கு ரத்த ஓட்டம் சீராகிறது நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு உடல் சுறுசுறுப்பாக இருக்க வழிவகுக்கிறது பெடிக்யூர் செய்துக்கொள்வதால் உங்கள் கால்கள் பொலிவுடன் காணப்படும் கால்களை கடினமாகவும், வறண்டு போக விடாமலும் பார்த்துக்கொள்ளும்