SETC பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது தமிழக சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை சம்பந்தமான கோரிக்கைகளின் விவாதம் நடைப்பெற்றது அதில், 50 சதவீத சலுகையில் பயணம் செய்யும் அறிவிப்பு மிகுந்த கவனம் பெற்றுள்ளது ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது ஆறாவது பயணம் முதல் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் இது பொருந்தும் இந்த சலுகையை பெற போக்குவரத்து தகவல் மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் அடிக்கடி பேருந்துகளில் பயணிக்கும் நபர்களுக்கு இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பு வரை முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்