பொதுவாக குழந்தைகளின் செயல்திறனை குட்டித் தூக்கம்
அதிகரிக்கிறது. இது பெரியவர்களுக்கும் பொருந்தும்


மருத்துவ உலகில், குட்டித் தூக்கம் 'Power nap' என
அழைக்கப்படுகிறது. அதன் நன்மைகள் ஏராளம்.


பணியிடத்தில் கண்ணைக் கட்டினால், டீ குடித்து,
முகத்தைக் கழுவி என பலவாறு சமாளிக்கிறோம்


ஆனால் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்யாமல், பவர் நேப் எடுத்து
உற்சாகமாக வேலை செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


சாப்பிட்ட பின் ஏற்படும் உண்ட மயக்கத்தை
’ஃபுட் கோமா' என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


இந்த சமயங்களில் நாமாகவே ஒரு குட்டித் தூக்கம்
போடலாம். இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்


பவர் நேப் நினைவாற்றலையும் படைப்பாற்றலையும்
அதிகரிப்பதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்


சமீபத்தில் பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு
அரை மணி நேரம் பவர் நேப் இடைவெளி அளித்துள்ளது


பிரபல செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பில், பவர் நேப்பால்
மூட் ஸ்விங், கவன சிதறல் குறைவது தெரிய வந்துள்ளது


வாங்க நாமளும் பவர் நேப் எடுத்து, சுறுசுறுப்பா
அடுத்த வேலைய போய் பாக்கலாம்!