தமிழ் மாதங்களில் 6வது மாதம் புரட்டாசி



இந்த மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகும்



நடப்பாண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது



பொதுவாக புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது என சொல்வார்கள்



இதற்கு அறிவியல் ரீதியாக சில காரணங்கள் சொல்லப்படுகிறது



புரட்டாசி மாதம் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் பருவமாகும்



மழையால் பூமி குளிர்ச்சியடையும் பொருட்டு தன்னுள் இருக்கும் வெப்பத்தை வெளியிடும்



இந்த மாதத்தில் கோழி, ஆடு, மாடுகளுக்கு தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. நமக்கும் தொற்று பரவலாம்



இதனால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பிற உணவுகளை உண்ணலாம்



ஒருவேளை அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் அளவாக சாப்பிடுங்கள்