கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சர்தார் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார் இப்படத்திற்காக கார்த்தி பல கெட்-அப்புகளை போட்டுள்ளார் அந்த போட்டோக்கள் தற்போது வெளியாகியுள்ளது இரு வேறு காலகட்டங்களில் இருப்பது போன்று கதை எடுக்கப்பட்டுள்ளது இதனால் படத்தில் ஃப்ளேஷ் பேக் காட்சி இருக்கும் என பேசப்படுகிறது இப்படத்தில் கார்த்தி வயதான தோற்றம் கொண்ட ஒரு கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார் சர்தார் படத்தில் லைலாவும் நடித்துள்ளார் பல ஆண்டுகளுக்கு பிறகு லைலாவின் கம்-பேக்காக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது கார்த்தியின் சர்தார் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன