விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்



மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது



மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம், 5,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது



கல்கியின் ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது



நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் ஆகியோரிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



அண்மையில் வசூல் தொடர்பான விவரங்களை, தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது



”முதல் நாளில், உலகம் முழுவதும் 80 கோடி ரூபாய் வசூலித்தது”



இரண்டாவது நாளில் 150 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 200 கோடி ரூபாயையும் வசூல் செய்தது என அறிவிக்கப்பட்டுள்ளது



தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயை இப்படம் வசூல் செய்துள்ளது



தமிழ்நாட்டில் முதல் ஐந்து நாட்களில் ரூ.100 கோடி வேகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது, பொன்னியின் செல்வன்