ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக பணிபுரிந்து பிரபலமானவர் செந்தில் மதுர சீரியலின் மூலம் நடிகரான செந்திலுடன் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜா நடித்தார் இருவரும் சீரியல் உலகின் ஆதர்ச ஜோடியாக மாறினர் தொடர்ந்து இருவரும் சரவணன் - மீனாட்சி தொடரில் இணைந்து நடித்தனர் இந்தத் தொடர் ரேட்டிங் அள்ளிய நிலையில், ம்றுபுறம் இருவரும் காதலில் விழுந்தனர் 2014ஆம் ஆண்டு இருவரும் கொண்டாட்டமாக திருமணம் செய்து கொண்டனர் அதன் பின்னர் மாப்பிள்ளை சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர் 8 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோராக இருப்பதாக கடந்த ஆண்டு இருவரும் அறிவித்தனர் வளைகாப்பு புகைப்படங்களை செந்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் நேற்று இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்