பிரபல மின்னணு பிராண்டான சாம்சங், இந்தியாவில் அதன் மிட் - ரேஞ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது இதற்கு சாம்சங் கேலக்சி எம்34 5கி (Samsung Galaxy M34 5G) என்று பெயரிடப்பட்டுள்ளது சாம்சங்கின் இந்த புதிய ஸ்மார்ட்போனை அமேசானில் வாங்கலாம் மற்ற எம் சீரிஸ் போன்களைப் போலவே இந்த ஃபோனும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கும் 6.6 இன்ச் SAMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் இது HD+ டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் முன்பக்கக் கேமரா திரையின் மேற்புறத்தில் உள்ள நாட்ச் உள்ளே இருக்கும் இது மெலிதான தோற்றத்தை பெற்றிருக்கும் இது பயனர்களுக்கு உதவிகரமாக இருக்கும்