நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’



இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது



ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்துள்ளார்



இயக்குநர்கள் ஹரி - ஹரிஷ் இயக்கியுள்ளனர்



யசோதா படத்தை குறித்து சமந்தா பேட்டி அளித்துள்ளார்



படத்தில் ஒரு அங்கமாக இருப்பதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்



இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும்



இது நிச்சயம் பெரிய திரையில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்



ஓடிடிக்கு பழகிவிட்டதால், திரையரங்குக்கு பார்வையாளர்களை அழைத்து வருவது கடினமாகிவிட்டது



இதனால் கதைகளை மறு பரிசீலனை செய்ய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார் சமந்தா