முதன்முறையாக காதல் மனைவி அஞ்சலியை 1990ல் மும்பை மைதானத்தில் சந்தித்தார் 22 வயதில், தன்னை விட 5 வயது மூத்தவரான அஞ்சலியை மணந்துள்ளார் இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ரசிகரான சச்சினின் தந்தை, இவருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் வைத்துள்ளார் தனது முதல் காரான மாருதி 800-ஐ கடன் வாங்கியே வாங்கியுள்ளார் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான இவர், டக்-அவுட் ஆகினார் இளம் வயதில் வேகப்பந்து வீச்சாளராக வேண்டுமென்று முயற்சித்துள்ளார் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இளம் வயதிலேயே இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஆடிய பெருமை இவரையே சாரும் பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் இவர்தான் 3வது நடுவரால் முதன்முதலாக அவுட்டான வீரரும் சச்சின் டெண்டுல்கரே ஆவார்