டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தொடக்கம் முதலே அதிரடி பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது பஞ்சாப் அணி பவர்பிளேயில் 60 ரன்கள் மேல் குவித்தனர் மறுமுனையில் பஞ்சாப் அணி வீரர் ராஜபக்ஸா அரை சதம் அடித்து அவுட் ஆனார் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 191/5 ரன்கள் எடுத்தனர் கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்களையும் மற்ற வீரர்கள் தலா 1 விக்கெட்களையும் எடுத்தனர் அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சற்று தடுமாறி ஆடினார்கள் 16 ஓவர் முடிவில், மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது டக்வொர்த்-லூயிஸ் முறைபடி பஞ்சாப் கிங்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்