பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் உருவானது



இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது



ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்



பெரும் பட்டாளம் கொண்ட இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார்



ஆஸ்கருக்கு அடுத்தபடியாக உள்ள கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் இடம் பெற்றிருந்தது



தற்போது நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது



ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக்கொண்டனர்



காலை முதல் இக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்



இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், மோகன் லால், பாடகி சித்ரா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்



நரேந்திர மோடி, சந்திர பாபு நாயுடு ஆகிய அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்