கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி இந்திய அணி, அயர்லாந்துடன் ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் தன் முதல் கிரிக்கெடி போட்டியை விளையாடினார். இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.



சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் ரோகித். 2013- 209/ 2014-267/ 2017-208



2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா, இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்டார்.



ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டன் ரோகித் சர்மா. கடந்த 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்று தந்துள்ளார்.



இந்திய மண்ணில் 17 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள கேப்டன் ரோகித் அவற்றில் 16 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். இதுதான் சொந்த மண்ணில் ஒரு கேட்பன் பெற்றுள்ள அதிக வெற்றியாகும்.



T20 கிரிக்கெட்டில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்கிற பெருமையைப் பெற்றவர்.



இதுவரை அவர் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



T20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனைக்குச் சொந்தக்காரார்.



மொத்தம் 230 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 9283 ரன்கள் குவித்துள்ளார்.இதில் 44 அரை சதங்களும், 29 சதங்களும் அடங்கும்.



டி20யில் 125 போட்டிகளில் ஆடி 3,313 ரன் எடுத்துள்ளார். 44 டெஸ்ட் போட்டிகளில் 3,076 ரன் எடுத்துள்ளார்.



டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடித்துள்ள ரோகித் டெஸ்டில் 14 அரை சதங்கள் மற்றும் 8 சதங்களையும் அடித்துள்ளார்.