மார்ட்டின் லூதர் கிங்
1929ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி அட்லாண்டாவில் பிறந்தார்.


1955ஆம் ஆண்டு மார்டின் லூதர் கிங் டாக்டர் பட்டப்படிப்பை முடித்தார்.



1950கள் முதல் அமெரிக்காவில் நிலவி வந்த இனவெறி தாக்குதல்களுக்கு எதிராக இவர் குரல் கொடுத்து வந்தார்.



இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக 29 முறை இவர் சிறைக்கு சென்றுள்ளார்.



இவர் ஒரு சிறப்பான சொற்பொழிவாளர் என்பதற்கு சான்று அவருடைய 'I have a Dream' பேச்சு.



அமெரிக்கா அரசு வியட்நாமில் போருக்கு செல்ல தயாராக இருந்த போது அதை மார்டின் லூதர் கிங் கடுமையாக எதிர்த்தார்.



இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அமெரிக்காவில் தேசிய நாள் அனுசரிக்கப்படுகிறது.



தன்னுடைய வாழ்நாளில் இவர் 6 புத்தகங்களை எழுதியுள்ளார்.



1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.
இப்பரிசை குறைந்த வயதில் பெற்றவர் இவர் தான்.


1953ஆம் ஆண்டு ஸ்காட் என்பவரை மார்டின் லூதர் கிங் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்தன.