சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நக்‌ஷத்ரா



சென்னையில் பிறந்த நக்‌ஷத்ரா நாகேஷ் தன்னுடைய திரைப்பயணத்தை
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தொடங்கினார்.


தன்னுடைய துறுதுறுப்பான பேச்சினால் பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார் நக்‌ஷத்ரா.



தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்துவருகிறார்.



தன்னுடைய பள்ளிப்பருவத்தில் ராகவ் என்பவருடன் நட்புடன் இருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது



கடந்த ஆண்டு ராகவ்தான் தன்னுடைய காதலன் என்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததோடு
பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.


கணவர் ராகவ், மெடிஃபோகஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்ட என்னும் நிறுவனத்தின் இயக்குனர்.



கடந்த டிசம்பர் மாதம் நக்‌ஷத்ரா நாகேஷ் மற்றும் ராகவ் ஆகியோருக்கு திருமணம் நடந்து முடிந்தது.



தன்னுடைய திருமணத்திற்கு பிறகு நக்‌ஷத்ரா நாகேஷ் இன்று தல பொங்கலை கொண்டாடியுள்ளார்.



அவரின் பொங்கல் கொண்டாட்ட படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.