குழந்தைகளுக்குப் பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் கொடுக்காதீர்கள்..அரசின் உத்தரவுக்கு காரணம் என்ன? பூங்காக்கள், கண்காட்சிகள், கடற்கரைகள் என அனைத்து பொது இடங்களிலும் பஞ்சுமிட்டாய் விற்கப்படுகிறது இதன் கண்ணை கவரும் வண்ணத்தாலும் தித்திப்பான சுவையாலும் பல குழந்தைகளும் வாங்கி உண்பார்கள் பஞ்சுமிட்டாய்களில் பலரும் விரும்பி வாங்கக்கூடியது ரோஸ் கலர் பஞ்சுமிட்டாய் இந்த பஞ்சுமிட்டாய்களில் ரோஸ் கலர் வருவதற்காக நிறமி பயன்படுத்தப்படுகிறது சமீபத்தில் சோதனை செய்ததில் உயிருக்கு ஆபத்தான `ரோடமைன் பி’ என்ற நிறமி பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது இதை இண்டஸ்ட்ரியல் டை என்று அழைக்கிறார்கள் மேலும் இது உண்பதற்கு ஏற்றதல்ல, அவ்வாறு உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இதனால் உங்கள் குழந்தைகளுக்கு பஞ்சுமிட்டாய் வாங்கி கொடுக்காமல் இருப்பதே சிறந்தது