பல் ஈறுகளில் ரத்தம் வடிந்தால் வாய் சுத்தமாக இல்லை என்ற கருத்து பெரும்பாலும் பரவிவருகிறது தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காததும் பல் ஈறுகளில் ரத்தம்வடிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள் ஈறுகளில் ரத்தம் கசிந்தால் உணவுமுறைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும். ஃப்ளூரைடு கொண்ட டூத்பேஸ்டுகளைப் பயன்படுத்துவது அவசியம் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தவிர்த்துவிடுங்கள் பச்சை காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள் சீரான தூரிகைகள் கொண்ட ப்ரஷ்களைவிட மேடுபள்ளமாக உள்ள ப்ரஷ்களே சிறந்தது அடிக்கடி பற்களில் பிரச்சினை ஏற்படுபவர்கள், மவுத்வாஷ் பயன்படுத்தும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளலாம் ஆறுமாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து பற்களை பரிசோதிக்க வேண்டும்