பாலிவுட்டின் காதல் ஜோடிகளாக இருந்து, திருமணம் செய்து கொண்ட ஜோடி, ஆலியா-ரன்பீர்



பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவரும் டேட்டிங் செய்ய தொடங்கினர்



கிட்டதட்ட 5 வருட காதலிற்கு பிறகு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர்



நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் சூழ இவர்களின் மும்பையில் திருமணம் நடைபெற்றது



தாங்கள் பெற்றோர்களாகவிருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருந்தார் ஆலியா



அதன் பிறகு சில மாதங்களில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது



தங்களது குழந்தைக்கு ராஹா என்று பெயர் வைத்துள்ளனர்



புதிதாக தந்தையாகியுள்ள ரன்பீர், துபாயில் நடைப்பெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளார்



அதில் தனது குடும்பம் குறித்தும், தனது மகள் குறித்தும் பேசியுள்ளார் ரன்பீர்



தனது மகளுக்கு 20 வயதாகும் போது தனக்கு 60 வயதாகும் என குறிப்பிட்ட அவர், இதுவே தனது மிகப்பெரிய பயம் என்றும் தெரிவித்தார்