அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரஜினி தற்போது சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகில் ஜொலித்து வருகிறார் ரஜினி இதுவரை பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் அவற்றில் சிலவற்றை பார்ப்போம் கர்நாடகாவைச் சேர்ந்தவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராவதா என பலரும் முன்னர் கேள்வியெழுப்பி வந்தனர் கடின உழைப்பால் மட்டுமே ரஜினி உயரத்திற்கு சென்றார் என இப்போது பலர் புரிந்து கொண்டனர் ரிலீஸின் போது மட்டும் ரஜினி அரசியல் குறித்து பேசுவார் என கூறப்படுகிறது அரசியலுக்கு வருவேன் என போக்கு காட்டிய அவர், இப்போது வரை அரசியலுக்கு வரவேயில்லை ரஜினி கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது ஆனால், அதுவே இப்போது அவரது ஸ்டைலாக மாறிவிட்டது