ஜெயிலர் அப்டேட் உடன், போட்டோவை பதிவிட்ட ராகவா லாரன்ஸ்!



சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிதீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ்



இப்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்



ரஜினி நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தான் இது



பி.வாசு இயக்கும் இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸுடன் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்



இந்தப் படம் வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது



ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது



இதனால் ஜெயிலர் படத்தின் கலெக்‌ஷனில் பாதிப்பு ஏற்படும் என பரவலாக பேசப்பட்டு வந்தது



இந்நிலையில் இன்று ஜெய்லர் என்ற ஹேஷ்டேக் உடன் ராகவா லாரன்ஸ் போட்டோ பதிவிட்டுள்ளார்



இதனால் ஜெயிலர் திரைப்படத்தில் லாரன்ஸ் நடிகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது