கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ் குமார் கடந்த ஆண்டு மாரடைப்பால் காலமானார் மிகச் சிறிய வயதிலியே திரையுலகிற்குள் வந்தவர்களுள் இவரும் ஒருவர் இவர் செல்லமாக அப்பு என அழைக்கப்படுகிறார் புனீத்தின் இயற்பெயர் லோஹித் சென்னையில் பிறந்த இவர், சரளமாக தமிழ் பேசக்கூடியவர் புனீத் ராஜ்குமாரின் குடும்பமே நடிப்பு கலைஞர்களால் நிறைந்ததுதான் இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்துள்ளது கே ஜி எஃப் புகழ் நடிகர் யஷ்-உடன் நல்ல நட்பு பாராட்டியவர் இவர் சக நடிகரான சுதீப்பின் நெருங்கிய நண்பர்களுள் இவரும் ஒருவர் தனது 46ஆவது வயதில் கடந்த ஆண்டு இதே தேதியில் உயிர் நீத்தார் புனீத் இவரது மறைவு, இன்றளவும் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது