மின்னலே படம் மூலம் பலருக்கும் பரீட்சயமானவர் ரீமாசென் பலரது மனங்களை பூ போல் கொய்த நாயகியின் பிறந்த நாள் இன்று கொல்கத்தாவில் பிறந்த இவர், மும்பையில் படித்து வளர்ந்தார் மாடலிங் துறையில் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் சித்ரம் என்ற தெலுங்கு படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்தார் மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நாயகியாக பல படங்களில் நடித்திருந்த இவர் சில படங்களில் வில்லியாக வந்து மிரட்டினார் 2012-ல் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் தலைகாட்டவில்லை இவர்களுக்கு ருத்ரவீர் என்ற ஆண் குழந்தை உள்ளது ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இவர் நடித்திருந்த கதாப்பாத்திரம் இன்றளவும் பலரால் பாராட்டப்படுகிறது இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்