பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகியுள்ளது இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக் போன்ற பலரும் நடித்துள்ளனர் புத்தகத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம் கல்கி கிருஷ்ணமூர்த்தி 1950 முதல் 1954 வரை இந்த நாவலை எழுதினார் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இதுவும் ஒன்று இது சோழ அரச குடும்பத்தை சுற்றி நடக்கும் வரலாற்றை தழுவிய கதை இதுவரை இப்புத்தகத்தின் கதையை தழுவி எந்த படமும் எடுக்கப்படவில்லை இக்கதையை அடிப்படையாக கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காமிக்ஸ் வெளியிடப்படவுள்ளது இதுவரை இந்த புத்தகம் ஐந்து வெவ்வேறு எழுத்தாளர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 2015 -ல் ராஜலட்சுமி சீனிவாசன் இந்த புத்தகத்தின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்