கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டது



லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது



மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக இப்படம் எடுக்கப்பட்டது



இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது



இப்படத்தின் முதல் பாகம் வசூலிலும் சாதனை படைத்தது



பெரும் எதிர்பார்ப்புகளுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது



இப்படம் உலகம் முழுவதும் 3200 திரையரங்கில் வெளியானது



முதல் நாளில் இந்தியா முழுவதும் 25.45 கோடிகள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



தமிழில் 18.97 கோடிளையும், இந்தி பதிப்பில் 1.7 கோடிகளையும் வசூல் செய்துள்ளது



மலையாளத்தில் 1.35 கோடிகளையும், தெலுங்குவில் 3.4 கோடிகளையும் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது