மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கினார் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியானது பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்தது இது பலரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமான வெற்றி பெற்று 500 கோடி வசூலை வாரிக்குவித்தது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அமைந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது இப்படத்தில் ‘சொல்’ பாடல் உள்பட பல காட்சிகளும் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டன நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிடுமாறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்து வந்தனர் அதன்படி, இன்று சொல் பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது அந்த பாடல் தற்போது வைரலாகி பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மகிழ்வித்துள்ளது!