மஞ்சள் ஒரு இயற்கையான கிருமி நாசினியாகும்



,மஞ்சளில் உள்ள நற்குணங்கள் நம் உடலுக்கு அதிகளவு நன்மைகள் மற்றும் சத்துக்களை தரக்கூடியது.



மஞ்சள் தேநீர் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.



மஞ்சள் சேர்த்துக் கொதிக்கவைத்த வெந்நீரில் வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் ஆறுவதோடு, சளி முறிந்து எளிதில் வெளியாகும்.



மஞ்சள், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப்போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் போன்றவை குணமாகும் .



மஞ்சள் முகத்துக்கு ஒருவித மினுமினுப்பைத் தருவதற்கும், வசீகரத்தைத் தருவதற்கும் உதவுகிறது.



மஞ்சள் தூளை பாலில் போட்டுக் காய்ச்சி சாப்பிட வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்றில் எரிச்சல் போன்றவை சரியாகிறது.



பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.



12 மிளகை பொடித்து 2 ஸ்பூன் தேனில் இரவு ஊற வைத்து காலையில் இதை சாப்பிடலாம். தேனில் சிறிது மஞ்சள் கலந்து உண்பதும் பலன் தரும்.



மஞ்சளில் இயல்பாகவே ஆண்டிசெப்டிக், ஆன்டிவைரல் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன.