சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் இடையே சுமாரான வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து எந்த புதிய படங்களிலும் ஒப்பந்தமாகமால் இருந்தார், சிம்பு இந்நிலையில், கிருஷ்ணாவின் இயக்கத்தில் ’பத்து தல’ படத்தில் தற்போது நடித்துள்ளார் சிம்பு ஏ.ஜி.ஆர். என்ற கேங்ஸ்டராக நடித்துள்ளார் இப்படம் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தாமதமானது இந்நிலையில் ‘பத்து தல’ திரைப்படமானது மார்ச் 30 ஆம் தேதி வெளியாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது