வேலைக்குக் கிளம்புவதற்கு முன் எடுத்துக்கொள்ளும் உணவுதான் உங்களுக்கான பிரேக்ஃபாஸ்ட்



நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிடுவது லஞ்ச். காலையில் வீட்டுக்கு வரும்போது சாப்பிடுவது டின்னர்



அதற்கடுத்த 12 மணி நேரம் ஓய்வெடுப்பதற்கானது. அந்த நேரத்தில் சாப்பிட வேண்டியதில்லை



அதாவது நைட் ஷிஃப்ட் வேலை பார்ப்பவர்கள், பகலை இரவாக்கிக்கொள்ள வேண்டும்



பலரும் பகலில் கிடைக்கிற நேரத்தை டிவி பார்க்க, போன் பேச பயன்படுத்துகிறார்கள்



போதுமான நேரம் தூங்காதவர்களுக்கு இளவயதிலேயே நீரிழிவு வருவதற்கான வாய்ப்புள்ளது



6 முதல் 8 மணிநேரத் தூக்கத்தில்தான் உங்கள் உடல் தன்னைத்தானே பழுதுபார்த்துக்கொள்ளும்



பகலில் தூங்கும்போது உங்கள் அறை, இருட்டாகவும் சத்தங்கள் இன்றியும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்



மாலை நேரத்தில் தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



இவற்றை பின்பற்றினால் ஓரளவுக்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்