குழந்தைகளின் மாமா என அழைக்கப்பட்டவர் நேரு. நேருவுன் கொள்ளுப்பேரன் ராகுல் காந்தி..! இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தினை தொடங்கினார்..! இந்த பயணத்தில் இந்தியா முழுவதும் ராகுல் காந்தி நடந்து வந்தார். இதில் குழந்தைகளுடன் இவர் அதிக நேரங்களைச் செலவழித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அனைத்து தரப்பு குழந்தைகளும் இவரிடம் மகிழ்ச்சியாக நேரத்தினை செலவிட்டனர். இவர் குழந்தைகளுடன் பழகியதைப் பார்த்து நேருவைப் போல் இவரும் குழந்தைகளுக்கு பிடித்தமானவர் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டது. இன்றுடன் இவர் தனது இந்திய ஒற்றுமை பயணத்தினை முடித்துக்கொள்கிறார். நேருவைப் போல் குழந்தைகளுக்கு ராகுல் பிடித்தமானவரா? உங்கள் பதில் என்ன?