திரௌபதி முர்மு இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்



நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி



திரௌபதி பட்டியல் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்



திரௌபதி முர்மு ஜூன் 20, 1958-இல் ஒடிசாவின்
மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார்


தனது அரசியல் பயணத்தை 1997 ஆம் ஆண்டு ராய்ரங்பூர் பஞ்சாயத் கவுன்சிலராகத் தொடங்கினார்



ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்



பிஜு ஜனதா தளம், பாஜக ஆதரவுடன் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது
நவீன் பட்நாயக் அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு விகித்தார்


2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தின் 9வது ஆளுநராக பணியாற்றியுள்ளார்



ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த ஜார்கண்ட் மாநில முதல் ஆளுநரும் இவர் தான்



ஒடிசா அரசில் போக்குவரத்து, வணிகம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற அமைச்சகங்களை கையாண்டுள்ளார்