தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா

தனது 36 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்

முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் நாக சைதன்யா

இப்படம் குறித்த அப்டேட் நாக சைதன்யாவின் பிறந்த நாள் ஆன இன்று வெளியாகியுள்ளது

இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்

இந்த படம் மூலம், தமிழில் எண்ட்ரி கொடுக்கிறார் நாக சைதன்யா

இவர்களது கூட்டணியில் உருவாக இருக்கும் இப்படத்திற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன

இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியிருந்தார்

இந்த படத்திற்கு கஸ்டடி என்று பெயரிடப்பட்டுள்ளது

இது, நாக சைதன்யாவின் 22ஆவது படமாகும்