மெட்ராஸ் கிருஸ்டியன் கல்லூரியில் படித்த பின் சில காலம் இந்திய விமான படையில் பணியாற்றினார்



நடிப்பை முறையாக பயின்ற பிறகு சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார்



கே.பாலசந்தரின் “ கல்யாண அகதிகள் ”எனும் படத்தில் அறிமுகமானார்



பின் வில்லங்கமான வில்லன் ரோல்களில் நடித்து அசத்தினார் நாசர்



“நாயகன்” படத்தின் போலீஸ் ரோல் நாசருக்கு திருப்பு முனையாக அமைந்தது


தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா , தேவர் மகன் , பாம்பே
, குருதிப்புனல் , இருவர் ஆகிய படங்களில் நடித்தார்



1995 ல் அவதாரம் எனும் படத்தை இயக்கி டைரக்டராக அவதாரம் எடுத்தார் நாசர்



தமிழ் சினிமா தவிர்த்து தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் ரவுண்ட் கட்டியுள்ளார்



மதராசப்பட்டினம் படத்தில் மேகமே, 96 படத்தில் அந்தாதி ஆகிய பாடல்களையும் பாடியுள்ளார்



இப்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்