உலக அளவில் குரங்கு அம்மை தொற்று தீவிரமாக பரவி வருகிறது.



இதுவரை 35,000 பேர் இந்த தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.



கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7500 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது,



மேலும், தடுப்புசியின் செயல்திறனும் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.



குரங்கு அம்மை நோய்களுக்கான முதற்கட்ட அறிகுறிகளாக வீங்கிய நிணநீர் கட்டிகள் தென்படுதல் ,தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை கூறப்படுகிறது.



குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.



மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.



குரங்கு அம்மை குறித்து விழிப்புணர்வுடன் இருப்போம்,