சல்மான் ருஷ்டி 1947 ஆம் ஆண்டில் பம்பாயில் பிறந்தார் அவரது முழுப்பெயர் அகமது சல்மான் ருஷ்டி ஆகும் சல்மான் ருஷ்டி படிப்பிற்காக இங்கிலாந்து சென்றார் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கிங்ஸ் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது அங்கு வரலாற்றுத் துறையில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார் சல்மான் ருஷ்டி இஸ்லாமியரான சல்மான் ருஷ்டி இஸ்லாத்தின் மீதான நம்பிக்கைகளை துறந்தவர் அவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமையும் கிடைத்தது சல்மான் ருஷ்டி எழுதிய முதல் புத்தகம் ‘க்ரிமஸ்’ 1998ஆம் ஆண்டு ‘சாத்தான் வெர்செஸ்’ எனப்படும் நாவலை எழுதினார் இந்த நாவக்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் கொலை மிரட்டலுக்கு ஆளான சல்மான் ருஷ்டி சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு கத்திக்குத்துக்கு ஆளாகியிருக்கிறார்!