1950- 60களில் திமுகவின் திராவிட தனிநாடு கொள்கை அதிதீவிரமாக உச்சத்தில் இருந்தது



அந்த காலகட்டத்தில் வெளியான-மர்ம யோகி, மலைக் கள்ளன், குலேபகாவலி, மதுரை வீரன், நாடோடி மன்னன் போன்ற எம். ஜி. ஆர் படங்கள் திராவிட சித்தாந்தங்களைக் கொண்டிருந்தன



தனது எதிரி யார்? நண்பர்கள் யார்? அரசியல் நிலைப்பாடு என்ன? திமுகவில் தனது முக்கியத்துவம் என்ன? என்பதை திரைப்படங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆர் புரிய வைத்தார்



எம்ஜிஆர் இயக்கி நடித்த 'நாடோடி மன்னன்' படத்தில் திமுக கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. நாடோடி மன்னன் ‘திமுக படம்’ என்பதைத் தாண்டி, திமுக- வைப் பற்றிய எம்.ஜி. ஆர்-ன் படம் என்று தான் வெளிபடுத்தப்பட்டது.



1967 மார்ச் 6-ல் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார்.



அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவையில் எம். ஜி. ஆர்-க்கு இடம் அளிக்கப்படவில்லை



இந்த காலகட்டத்தில் வெளியான எம்.ஜிஆர் திரைப்படங்கள் இந்தி மொழி எதிர்ப்பைக் கைவிட்டன. திமுக ஆட்சியாளர்கள் பற்றியும், அறிவுசார்ந்த நேர்மையான ஆட்சியைப் பற்றியும் பேசத் தொடங்கியது.



எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம். ஜி.ஆர் என்ற பிம்பத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றார். எ.கா: எங்கள் வீட்டுப் பிள்ளை, திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, ஒளி விலக்கு, வேட்டைக்காரன், காவல்காரன்



தீர்க்கமுடியாத முரண்பாடுகளை அடுத்து, 1972ல் அதிமுக என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார்



இந்த காலகட்டத்தில் வெளியான உரிமைக் குரல், ரிக்சாக்காரன், சிரித்து வாழ வேண்டும், இதயக் கனி, மீனவ நண்பன் போன்ற திரைப்படங்கள் ,மூலம் அண்ணாவின் உண்மையான திமுக, அதிமுக என்பதை உணர்த்தினார்.



1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.



முதல்வர் பதவியேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடோடி மன்னன் (வீரங்கன்) போல் தமிழக மக்களை காப்பாற்றுவேன் என்று தெரிவித்தார். இந்த திரைப்படம் எம்ஜிஆர்-ன் மிகப்பெரிய அரசியல் முதலீடு



அதாவது, எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து எதேர்ச்சையாக அரசியலில் வெற்றி பெறவில்லை. படங்கள்- அரசியல் என்பதை ஒருங்கிணைத்தார். திரைப்படங்களின் மொழியை மாற்றியமைத்தார்.



தமிழக மக்கள் தலைவர்களை திரையரங்குகளில் தேடவில்லை. மாறாக, திரையரங்கில் தான் வெகுஜன அரசியல் பேசப்படுகிறது. அரசியல், பிம்பக்காட்சிகளாக மொழி பெயர்க்கப்படுகிறது.