பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.



குறிப்பாக மதுரையின் அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமான ஒன்று.



ஐந்திணை நிலங்களில் ஒன்றான முல்லை நிலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளுடன்
மோதி விளையாடுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.


ஏறுதழுவதல் என்று குறிப்பிடப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் குறித்து கலித்தொகை, பெரும்பாணாற்றுப்படை
பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


'சல்லிக் காசு' என்னும் நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும்.



மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.



இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது.



பேச்சு வழக்கில் திரிந்து 'ஜல்லிக்கட்டு' என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.



சல்லி என்பது விழாவின்போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தை குறிக்கும்



இந்தக் காரணங்களால்தான் சல்லிக்கட்டு என்று பெயர் வந்தது, பின்னாட்களில் ஜல்லிக்கட்டாக மாறியது.