சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா



பின் நடிகையாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்



2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி வித்யாசாகரை திருமணம் செய்துகொண்டார்



இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்



நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த வித்யாசாகர் உடல்நிலை மோசமான காரணத்தால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்



சிகிச்சை பலனின்றி ஜூன் 28 ஆம் தேதி உயிரிழந்தார்



இந்த இழப்பு திரையுலகினர் மத்தியிலும் நடிகை மீனாவின் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது



கணவரின் இறப்புக்கு பின்னர் முடங்கிப்போயிருந்த மீனா சில மாதங்களுக்கு பிறகு தான் சகஜ நிலைக்கு திரும்பினார்



கடந்த சில நாட்களாக நடிகை மீனா மறுமணம் செய்து கொள்ள போவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் பரவி வருகின்றன



அதற்கு என்னுடைய பிரைவசியை மதிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார் என்று மீனா கேட்டுள்ளார்